Header Ads



கைகளை பிடித்தபடி அலி சப்ரியை மெச்சிய ஈரான் ஜனாதிபதி, இலங்கையிலிருந்து மகிழ்வுடன் விடைபெறுவதாக தெரிவிப்பு


- Anzir -


வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை விஜயத்தின் பின்னர், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி, மகிழ்வுடன் விடைபெற்றதாகவும், தனக்கு நன்றி கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.


அலி சப்ரி இதுபற்றி மேலும் கூறுகையில்


நான் ஈரானுக்கு சென்றிருந்த போது, ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசியை சந்தித்தேன். பின்னர் அநநாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார். அதன்பின்னராக நேற்று புதன்கிழமை ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தார்.


பிராந்தியத்தில் பதற்றம் நீடித்த போதிலும், அவர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்த பயணத்தை  ரத்துச் செய்யவில்லை.  இவர் இலங்கைக்கு வழங்கிய முக்கியத்துவத்தை இது விளக்குகிறது.


ஜனாதிபதி ரைசி இங்கு வந்திருந்த இச் சந்தர்ப்பத்தில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு புதிய முயற்சியான உமா ஓயா நீர்மின் திட்டத்தை திறந்து வைத்தார். இது மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க வாய்ப்பாக அமையும். எமது  முன்னோக்கிய நகர்வுகளின் போது, ​​நாடு செழிப்பானதொரு நிலையை அடைய உலகளாவிய சமூகத்துடன் ஒத்துழைப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


அவரை விமான நிலையத்திற்கு வழியனுப்ப நான் சென்றபோது, எனது செயற்பாடுகளை பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலும்  அவரது இலங்கை பயணம் தொடர்பிலும் நான் முன்நின்று அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும்,  அது வெற்றியை தந்ததாகவும், இருநாட்டு உறவுகளும் தொடர வேண்டுமென விரும்புவதாகவும், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி,  மேலும் குறிப்பிட்டதாகவும் அலி சப்ரி Jaffna Muslim இணையத்திற்கு மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.