Header Ads



உலகில் மிகக்குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் இலங்கை - ராஜாங்க அமைச்சருக்கு கவலை


உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது.


அமெரிக்காவின் ஊடகமொன்றுடனான விசேட நேர்காணலில் கலந்து கொண்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க  இதனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை ரீதியான உடன்படிக்கையை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.


உலகில் மிகக் குறைந்த வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் பெயரிடப்பட்டுள்ளோம். ஆனால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் படிப்படியாக வரி வருவாயை அதிகரித்துள்ளோம்.


நாம் இப்போது வரி செலுத்துவதில் இருந்து விலக்கை நீக்கியுள்ளோம். வரி இணக்கத்தை வலுப்படுத்தியுள்ளோம்.


2023 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து அரசாங்கத்தின் வருமானம் 11 வீதமாக அதிகரித்துள்ளது, இது அரசாங்கத்தின் வருமானத்தில் 8.1 வீதமாகும். 2024 ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 12 வீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.


மேலும் அந்த இலக்கை எங்களால் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது, ​​வரி இணக்கம் 130 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது.


வரி தொடர்பான பதிவு செய்தலும் அதிகரித்துள்ளது. நல்ல எண்ணிக்கையாக இருந்தாலும் திருப்தி அடைய முடியாது. வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரையும் வரி செலுத்த வைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அரசாங்கத்தின் தலைவர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமான கோடிஸ்வரர்கள், வங்கிகளில் பெற்ற கடன்கள் வியாபாரம் வங்கரோத்து என்ற போலி ஆவணங்களைச் செய்து வரி,வட் போன்ற கோடிக்கணக்கான ரூபாய்கள் செலுத்தப்படாமல் அவர்கள் சுதந்திரமாக கொள்ளையடிக்கவும் பொதுச் சொத்துக்களைச் சூறையாடவும் அனுமதித்துள்ள அரசு, அப்பாவி வர்த்தகர்கள், பொதுமக்களிடமிருந்து வரி, வட் என நேரடியாகவும், மறைமுகமாகவும் கொள்ளையடித்து பொதுமக்களின் வருமானத்தில் எந்த அதிகரிப்பும் இல்லாமல் முன்னையவிட பலமடங்கு வரிகளும், வட்டும் அறவிட்டு பெருமையடிக்கின்றது இந்த அரசாங்கத்தின் போலி மந்தி(ரி)கள். இந்த நாட்டு மக்களின் தேவை, அவர்களின் உணர்வுகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களுக்கு வரி வரி என அவர்களின் வாழ்க்கையை நெருக்கடிக்குத்தள்ளும் இந்த அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் அகற்றி மனிநநேயம் கொண்ட ஆட்சியாளர்களை தெரிவு செய்ய பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதற்காக பொதுமக்களும் உரிய அதிகாரிகளுடன் சேர்ந்து முழு முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.