Header Ads



இந்த அரசாங்கம் இன்னும் 6 மாதங்களுக்கே இருக்கப் போகிறது, சஜித் ஜனாதிபதியாவார் என நினைத்துக் கொள்வோம்


எதிர்க்கட்சித் தலைவர் அருவலகத்தில் இன்று(17) நடந்த ஊடக சந்திப்பில் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த கருத்து;


கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தற்போதைய இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இணக்கப்பாடு 2040 ஆம் ஆண்ட வரை தொடரப்போகிறது. ஆனால் இந்த அரசாங்கம் இன்னும் ஆறு மாதங்களுக்கே இருக்கப் போகிறது. 2040 ஆண்டு அவரை உடன்பாட்டிற்கு இந்த அரசாங்கம் வருமாயின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டையும் இணைத்துக் கொள்ளுமாயின் உசிதமானது என நாம் நம்புகிறோம். ஏனெனில் உடன்பாட்டிலிருந்து மீள முடியாது. 


மே மாத இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவார் என நினைத்துக் கொள்ளுவோம், அதன் பின்னர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என நினைத்துக் கொள்வோம். அவ்வாறானால் தற்போது இணக்கப்பாடு எட்டப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் நடத்திச் செல்ல வேண்டும்.2022 ஏப்ரல் 12 ஆம் திகதி கூறியதைப் போன்று நாம் இணங்கவில்லை. ஆகவே நாம் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என எம்மால் கூற முடியாது. அவ்வாறு இடம்பெற்றால் நாம் இரண்டாவது தடவையாக கடனை செலுத்த முடியாத நாடாக கருதப்படுவோம்.


1975 இல் இருந்து 2020 வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து கடன் மறுசீரமைப்புகளின் ஊடாக 60 % ஆன நாடுகள் முதற் தடவைகளில் தோல்வியடைந்து இரண்டாம்,

மூன்றாம்,நான்காம் தடவைகளில் சில நாடுகள் 11 ஆவது தடவையில் கடன் மறுசீரமைப்பிற்கு சென்றுள்ளன. நாடு ஸ்திரதன்மையில்லாமல் இருக்கும். பாரிய சரிவு ஏற்படும். ஆகவே எந்த வகையிலும் கடனை மீளச் செலுத்த முடியாத கடனை புறக்கணிக்கும் நாடாக மாறக்கூடாது.

No comments

Powered by Blogger.