Header Ads



தற்போதைய ஆட்சிக்கு விடைகொடுத்து, புதிய ஆட்சியை நிறுவ நாம் எந்நேரமும் தயார் - எங்களுக்கு அதிர்ஷ்டமும் உள்ளது



நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்." என ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு இன்று நடந்தது, நாளை நமக்கும் நடக்கலாம். எதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
அரசை விமர்சிப்பதற்கு எனக்குத் தகுதியில்லை எனவும், நீங்களும் ஜனாதிபதியாக இருந்தவர்தானே எனவும் சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனது தலைமையில் அமைந்த ஆட்சியானது மாறுபட்டதொன்றாகும். இலங்கை அரசியல் வரலாற்றில் அவ்வாறானதொரு அரசு இன்னும் அமையவில்லை. ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்பட்டன. தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டது. ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர். நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.
இந்த அரசு கொண்டுவந்த அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு மீண்டும் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு நாட்டுக்குக் கிட்டும்" - என்றார்.


2

நாட்டை சுற்றி வரும் போது, எங்களுக்கும் அதிர்ஷ்டம்  இழுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு  அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் போது எங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

குருநாகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களை நேற்று   (7) சந்தித்து உரையாடினார். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சந்தைக்குச் சென்ற 24    மணிநேரத்தில் சுசில் பிரேமஜயந்தவுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார் 

4 comments:

  1. You are the worst garbage. DON'T try to f....k the country again.

    ReplyDelete
  2. கடைசியாகச் சென்று ஞானக்காவைச் சந்தித்து பொதுமக்களிடம் களவாடிய கோடான கோடி ரூபாக்களில் பெரிய ஒரு தொகையை அள்ளிக் கொடுக்க ஞானக்காவின் அடுத்த எதிர்கூறல், மை3 அடுத்த இலங்கையின் சனாதிபதியாம். அந்த கற்பனையில் மிதக்கும் மை3 பலதைப் பத்தைக்கக்குவது சகஜம்.

    ReplyDelete
  3. Democratic .humanrights in your govt.what a joke.
    DigaNa attack galle attack hettipola attack easter bomb everything was happend by your govt

    ReplyDelete
  4. குப்பையில் கிடந்தவனை ஒருமுறை அறியாசனம் ஏற்றிய தவறை இன்னுமொரு முறை இலங்கை மக்கள் செய்ய தயாரில்லை

    ReplyDelete

Powered by Blogger.