Header Ads



எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிடுங்கள் - தயாசிறி


எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவுகளை இன்று மக்கள் எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரசாயன உரத்தினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என கூறிய மருத்துவர்கள், தற்பொழுது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பாவினால் மக்களது சிறுநீரகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றியும் பேச வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

தமக்கு எதிரான இதுவரையில் எவரும் கூக்குரல் எழுப்பவில்லை எனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை நேசித்தால், உண்மையாக இருந்தால் அவர்களை மக்கள் வெறுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அகங்காரத்துடன் இருக்கும் போது நிச்சயமாக கூக்குரல் எழுப்பி எதிர்ப்பை வெளியிடுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் சில தவறுகளை இழைத்துள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரப் பிரச்சினையினால் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பாவையே நாம் உண்ண நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

உரப்பிரச்சினையினால் சிறுநீரகம் பாதிக்கப்படவில்லை, விவசாயிகள் நீர் அருந்துவதில்லை, நாம் பயன்படுத்தும் நீரில் கெடியம் என்னும் உலோகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழவ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.