Header Ads



மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறமாட்டேன், எதிர்வரும் 3 வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்க ஜனாதிபதி அழைப்பு


நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய மொனராகலை - சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் , இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும்.

அவ்வாறு செய்யாமல், குறைகளை மாத்திரம் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகும்

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள்.

எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை.

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் கடமையாகும்.

தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மட்டும் பாருங்கள்.

சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலைசெய்யாதிருப்பதெனப் பார்க்க வேண்டாம்.

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறும், அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.