Header Ads



காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் வருகிறது - பிரதமர் உடனடி உத்தரவு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

மாகாண நிருவாகத்தின் கீழிருந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாளய் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான நஸிர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மத்திய வரிசை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று தான் பிரதம மந்திரி  மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டு கோளுக்கமைவாக இது சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வேண்டுகோளுக்;கு ஆதரவாக தன்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளில் உட்பட  ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பிரதம மந்திரியை சந்தித்தபோது இதற்கான உடனடி உத்தரவினை பிரதம மந்திரி அதிகாரிகளுக்கு வழங்கி வைத்ததாகவும் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.