Header Ads



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடும் நெருக்கடி மலை போல குவிந்த கடன் - எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்


அடுத்த மாதம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 42 கோடி அமெரிக்க டொலரை (சுமார் 8,610 கோடி ரூபா) பெற்றுக்கொள்ள முடியாமல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பணத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கோரியிருந்த போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் ரூபாவை தேடிக்கொள்ள முடியும் என்றாலும் டொலரை தேட முடியாது எனவும் இந்த நிலையில் எரிபொருள் இறக்குமதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் சுமார் 370 கோடி அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை வங்கிக்கு சுமார் 196 கோடி அமெரிக்க டொலர்களையும், மக்கள் வங்கிக்கு சுமார் 176 கோடி அமெரிக்க டொலர்களையும் செலுத்த வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

3 comments:

  1. இவருடைய கதைகளைப் பார்க்கும் போது நாடகம் வேறெரு திசையில் செல்வது போல் தெரிகிறது. அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் மீது திணிக்கும் பாத்திரம் இவருக்குக்கிடைத்திருப்பதுபோல் தெரிகிறது. இந்த நாடகம் தொடர்ந்தும் நடிக்க முடியாது. அதற்கு இந்த நாட்டின் பொதுமக்கள்மிகவிரைவில் தீர்ப்பளிப்பார்கள்

    ReplyDelete
  2. இவனொரு போக்கத்தவன் பஞ்சப்பயல் தேர்தலுக்கு நிக்க வழியில்லாமல் நானும் பணம் கொடுத்திருக்கிறேன் , பிச்சைக்காரனுக்கு பதவி கொடுத்தால் இதுதான் நடக்கும்

    ReplyDelete

Powered by Blogger.