Header Ads



அநுரகுமாரவிடம் நன்றாக, வாங்கிக்கட்டிய மஹிந்தானந்த


நாடாளுமன்றத்தை வழி நடத்துவது யார்? நீங்களா? மஹிந்தானந்தவா? என்னை அமரச் சொல்கின்றார். என்னை தடுக்கவும், உரையை நிறுத்தவும் முயற்சிப்பது நீங்களா? அல்லது மஹிந்தானந்தவா? இதற்கு எனக்கு பதில் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க(Anura Dissanayaka) கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்ப முற்படுகையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரை தடுக்க முயன்றமையால் ஆத்திரமடைந்த அநுர குமார, நாடாளுமன்றத்தை வழி நடத்துவது மஹிந்தானந்தவா அல்லது சபாநாயகரா என கேள்வி எழுப்பிய நிலையில் வாதப்பிரதிவாதங்கள் முற்றியது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தை வழி நடத்துவது யார்? நீங்களா? மஹிந்தானந்தவா? என்னை அமரச் சொல்கிறார். என்னை தடுக்கவும், உரையை நிறுத்தவும் முயற்சிப்பது நீங்களா? அல்லது மஹிந்தானந்தவா? இதற்கு எனக்கு பதில் வேண்டும். உங்களுடைய இந்தப் பிரச்சினைதான் நாடாளுமன்றத்தில் பிரச்சினையாகவே உள்ளது.

கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டுமே. மஹிந்தானந்த தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னைப் பற்றியும், கட்சிப் பற்றியும் என்ன வேண்டுமோ தெரிவிக்க முடியும். இருக்கிறது எனப் பொய்யாகக் கோப்புகளைக் குலுக்க வேண்டாம். நான் வேண்டுமென்றால் உங்களைப் பற்றி தெரிவிக்கின்றேன்.

நான் இங்குள்ள வெளியில் நிறையவே தெரிவித்திருக்கின்றேன். நினைப்பதையெல்லாம் தெரிவிக்கின்ற பொறுப்பற்ற, இந்த அமைச்சர். வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த, அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது மறைக்கப்பட்ட இரகசியத்தை தன்னால் வெளியிட முடியுமெனக் குறிப்பிட்டார்.

எனக்கு கூற விருப்பமில்லை. விவசாய அமைச்சின் மலசலக்கூடத்தில் கிடைத்தவைத் தொடர்பில் என்னால் தெரிவிக்க முடியும். நான் அங்கு செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் இதற்கு பதிலளித்த அநுர குமார திசாநாயக்க, ”முடிந்தால் ஒரு நிமிடமாவது நிலைக்கக்கூடிய பொய்யான தகவலை வெளியிடுமாறும், விநாடிக்கு விநாடி மாறும் கருத்துக்களை வெளியிட வேண்டாம்” எனவும் வலியுறுத்தினார். Twin

No comments

Powered by Blogger.