Header Ads



இலங்கையர் படுகொலை, அவமானம் தாங்காமல் வெட்கி தலைகுனிகின்றோம் - பாக்கிஸ்தானின் தலைசிறந்த கண்மருத்துவர் கவலை


இலங்கை எங்களிற்கு 35000 கண்களை தானம் செய்தது, ஆனால் நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என பாக்கிஸ்தானின் தலைசிறந்த கண்மருத்துவர் நியாஜ் புரோகி கவலை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இலங்கை பிரஜை கும்பலொன்றினால் படுகொலை செய்யப்பட்ட தருணம் முதல் நான் நாட்டின் ஏனைய பலரை போல துயரத்தில் சிக்குண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் அவமானம் தாங்காமல் வெட்கி தலைகுனிகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானில் உள்ள இலங்கை கண்தான அமைப்பின் முக்கிய உறுப்பினரான அவர் அந்த அமைப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சாமா டிஜிட்டலிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை 83200 விழிவெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் 1967 முதல் கண்தான சங்கம் பாக்கிஸ்தானிற்கு 35000 விழிவெண்படலங்களை தானம் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எங்களிற்கு கண்களை தானம் செய்தது நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.