Header Ads



தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் - மைத்திரிபால


தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தேர்தல் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாடு இதுவரை இல்லாத பாரிய நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளதாகவும், தற்போது உணவுப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அத்தோடு இன்னும் ஓரிரு மாதங்களில் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். TL

2 comments:

  1. கடைசி வருடம் முழுவதும் செய்த பொருளாதார முன்னேற்றம். கமிசன் அடித்தது, சிறையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரன்களை கோடான கோடி பணம் எடுத்துக் கொண்டு விடுதலை செய்ததும், உல்லாச வாகனங்களை இரவோடு இரவாக இறக்குமதி செய்து வௌியில் விற்று கோடான கோடி பணம் களவாடியதும் தான் இவர் செய்த பொருளாதார முன்னேறறம். கள்ள மறுசிறா என புகழ் பெற்ற கள்ளன்.

    ReplyDelete

Powered by Blogger.