Header Ads



'நாட்டைக் கைப்பற்ற தயார்' - அநுரகுமார அறிவிப்பு


தற்போதைய பாதகமான சூழ்நிலையில் இருந்து வெளிவரும் வகையில் இலங்கையை கைப்பற்றி கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அதன தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி நேற்றையதினம் (20) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் போதுமான துன்பங்களை அனுபவித்துள்ளதுடன், இலங்கை மக்களின் துன்பங்களில் இருந்து அதிகமான பணத்தை  ஊழல் நிறைந்த அரசாங்கம் சம்பாதித்துள்ளது என தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் நிலையில் நாடு உள்ளது, வெளிப்படைத்தன்மை மட்டுமே ஒரே வழி என்ற அவர், ஒருவர் கிணற்றில் விழுந்தால், கிணற்றின் வாய் வழியாகத்தான் வெளியேற முடியும் என்று குறிப்பிட்டார்.

தங்களால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி தற்போது இருக்கும் நிலையில் நாட்டைக் கைப்பற்றத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஊழல் அரசாங்கமும் அதிகாரிகளும் அன்டிஜென் சோதனை கருவி இறக்குமதியிலிருந்து போதுமான தரகுப் பணத்தைப் பெற்றதுடன், தனிமைப்படுத்தல் வசதிகள் மூலம் பணம் சம்பாதித்தனர் என்றும் குற்றஞ்சுமத்தினார்.

அவற்றில் இருந்து எடுக்கக்கூடிய பணம் அனைத்தும் முடிந்ததும்,  நனோ நைட்ரஜன் உர ஒப்பந்தத்தை அதிகாரிகள் கொண்டு வந்தனர். விவசாயிகள் தங்கள் பயிர்களை வளர்ப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் உரம் இல்லை, நாட்டில் உணவுப் பற்றாக்குறை தெளிவாக உள்ளது, மேலும் அதிகாரிகள் இன்னும் உர ஒப்பந்தத்தின் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசியப் பொருட்களுடன் 150க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாகவும், மக்களுக்கு இந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அரசாங்கத்தால் சாதாரண நடுத்தர மக்கள்தான் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும் மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் உயர்த்தி கட்டியெழுப்ப வேண்டும், ஆனால் இந்த அரசாங்கத்தால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. Please go ahead Mr.Anura
    We hope you are the best one to run this country.
    Good luck

    ReplyDelete

Powered by Blogger.