Header Ads



காணாமல் போயுள்ள 96 மில்லியன் ரூபாய் பணம் - முழு விசாரணைக்கு உத்தரவு


சுற்றாடல் அமைச்சினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

திட்ட செயற்பாடுகளின் பின்னர் எஞ்சிய 96 மில்லியன் ரூபாய் பணம் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் அவ்வாறான விளம்பரங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உடனடியாக தகவல் ஆராய்ந்து, விசாரணை நடத்துமாறு திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.