Header Ads



பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டியை கிழித்தாரா..? - இதுவரை 100 பேர் கைது


பாகிஸ்தான் - சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சியல்கோட் நகரில் நேற்றைய தினம் இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2

அச்சத்தை ஏற்படுத்தும் மத நிந்தனை கொலைகள் -பாக்கிஸ்தானில்  இலங்கை தொழிற்சாலை முகாமையாளர் கொலை செய்யப்பட்டார் உடல் தீமூட்டப்பட்டது - அல்ஜசீரா 

இலங்கையின் தொழிற்சாலை முகாமையாளர் ஒருவர்  கும்பல் ஒன்றினால் அடித்துக்கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் தீமூட்டப்பட்ட சம்பவத்தினை பாக்கிஸ்தான் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இது மத நிந்தனையுடன் தொடர்புபட்ட விடயம் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாக்கிஸ்தான் தலைநகரிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சியால்கோட்டில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை  இடம்பெற்றது.

பாக்கிஸ்தானில் மக்களை உணர்ச்சிவசப்படவைக்கும் தூண்டிவிடும் விவகாரங்களில் மத நிந்தனையே தற்போது முக்கியமானதாக காணப்படுகின்றது.

இஸ்லாத்திற்கு எதிரான அவமதிப்பு என்ற சிறிய குற்றச்சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டி கொலைகள இடம்பெறச்செய்கின்றது.

பாக்கிஸ்தான் பிரதமர் இந்த சம்பவத்தினை பாக்கிஸ்தானிற்கு அவமானகரமான நாள் என தெரிவித்துள்ளதுடன் இந்த கொலை குறித்த விசாரணைகளை தான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் உணர்பூர்வமான தன்மை காரணமாக தன்னை பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சியால்கோட்டில்  இஸ்லாமிய புனித வசனங்கள் எழுதப்பட்ட சுவரொட்டியை இலங்கையை சேர்ந்த நபர் கிழித்தார் என்ற மத நிந்தனை குற்றச்சாட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என விசாரணையாளர்கள் கருதுவதாக தெரிவித்தார்.

நிலத்தில் வீழ்ந்திருக்கும் நபரை மதநிந்தனைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பலர் தாக்குவதை காண்பிக்கும் கொடுரமான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

அவரது உடல் தீயிட்டு கொழுத்தப்படுவதை  ஏனைய வீடியோக்கள் காண்பித்துள்ளன.அவரது கார் தலைகீழாக கவிழ்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.

அந்த கும்பலில் காணப்பட்ட பலர் தங்கள் அடையாளங்களை மறைப்பதற்கான முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை அவர்கள் எரிந்துகொண்டிருக்கின்ற உடலிற்கு முன்னால் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 50க்கும் அதிகமானவர்களைகைதுசெய்துள்ளதாக பாக்கிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார்.

சிசிடிவி வீடியோக்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்கின்றோம் 48 மணித்தியாலத்தி;ற்குள் விசாரணைகளை முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோக்களில் ஒலித்த கோசங்கள் மதநிந்தனைக்கு எதிரான டிஎல்பி கட்சி பயன்படுத்திவருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

டில்எல்பி கட்;சி கடந்த காலங்களில் மதநிந்தனைக்கு எதிரான போராட்டங்களின் மூலம் பாக்கிஸ்தானின் பல பகுதிகளை முடக்கியுள்ளது,கடந்த வருடம் பாரிசை சேர்ந்த சார்லி ஹெப்டோ  முகமது நபியின் கேலிச்சித்திரமொன்றை பிரசுரித்ததை தொடர்ந்து இந்த கட்சி பிரான்சிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது.

மதநிந்தனை தொடர்பில் கும்பல்கள் கொலைகளில் ஈடுபடுவது பாக்கிஸ்தானில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவமாக மாறியுள்ளது.பாக்கிஸ்தானில் இந்த குற்றத்திற்காக மரண தண்டனையும் விதிக்கலாம்.

பாக்கிஸ்தான் பிரதமரின் மதங்களிற்கு இடையிலான விவகாரங்களிற்கான ஆலோசகரான தஹீர் அஸ்ரபி சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.

இது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை-இஸ்லாத்தின் போதனைகளிற்கு எதிரானது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாக்கிஸ்தான் இலங்கை  இராஜதந்திரிகளுடன் தொடர்பில் உள்ளது என பாக்கிஸ்தான் அதிகாரி ஒருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார். இந்த ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என உறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மதநிந்தனை குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன  என தெரிவிக்கும் மனித உரிமை அமைப்புகள் சிறுபான்மையினத்தவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றன.

துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலிற்கு உடனடியாக தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை இன்றைய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு தெரிவித்துள்ளது.

5 comments:

  1. இந்த விடயத்தில் 100%இந்திய அரசு சார்பில் இயங்கி வரும் இந்துத்துவ நாசகார இந்திய புலனாய்வு பிரிவு சம்பந்தம் உள்ளது என்பதை நமது நாட்டின் மோடி யின் இரத்த வெறி கூட்டாளி நாயகன்ஞநாய்ன சார வுக்கு நன்றாக தெரியும் .முதலில் இவனை கைது செய்து விசாரிக்க
    வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த விடயத்தில் 100%இந்திய அரசு சார்பில் இயங்கி வரும் இந்துத்துவ நாசகார இந்திய புலனாய்வு பிரிவு சம்பந்தம் உள்ளது என்பதை நமது நாட்டின் மோடி யின் இரத்த வெறி கூட்டாளி நாயகன்ஞநாய்ன சார வுக்கு நன்றாக தெரியும் .முதலில் இவனை கைது செய்து விசாரிக்க
    வேண்டும்.

    ReplyDelete
  3. Please note that he did not remove the Quranic version in stead he removed from the wall of his office the wordings of a so called Muslim sect, such as Tahreer Labbaik something like this, this was informed by the people around there to that extremist party which thundered the office and pull this Sri Lankan Manager and torured to kill him. This extremist are Shia Terrorists who has nothing to do with Islam and Muslims. They are nothing but Terrorists. Govt of Pakistan so far arrested 150 suspected killers and the govt. will take stern action for the perpetrators.

    ReplyDelete
  4. There is no proof that Shias involved in this type of barbaric act. It is only Sunni terrorists do these type of barbarism.

    ReplyDelete
  5. There is no proof that Shias involved in this type of barbaric act. It is only Sunni terrorists do these type of barbarism.

    ReplyDelete

Powered by Blogger.