Header Ads



நான் அரசாங்கத்திற்கு எதிரானவள் கிடையாது, ஆனால் மக்கள் திட்டுகிறார்கள் - கீதா Mp


அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்களிடம் திட்டு வாங்க நேரிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) தெரிவித்துள்ளார்.

இந்துருவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தை மக்கள் திட்டித் தீர்க்கின்றனர். கிராமங்களுக்கு சேவைகளை வழங்காத காரணத்தினால் மக்கள் திட்டுகின்றனர்.

உங்களுக்கு தேனீர் அருந்த சீனி இல்லை என்றால் நீங்கள் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), பந்துல குணவர்தன (Bandula Gunawardane) ஆகியோரை மட்டுமன்றி இறுதியில் எங்களையும் திட்டுவீர்கள்.

சீமெந்து விலை உயர்வினால் பாதைகளை செய்யும் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. நான் அரசாங்கத்திற்கு எதிரானவள் கிடையாது.

உரப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள், மக்களை மிகவும் பிரச்சினையில் ஆழ்த்திய ஓர் விடயமாகும். மக்களுக்கு விவசாயம் செய்ய முடியாவிட்டால் மக்கள் அரசாங்கத்தை திட்டுவார்கள்.

இந்தியாவிலிருந்து பெருந்தொகை பணத்திற்கு உரம் இறக்குமதி செய்யப்படுகின்றது. அரிசியில் தன்னிறைவு காணப்பட்டது.

தற்பொழுது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி தொடர்பில் எமக்கு நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.