Header Ads



பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நபர், செயலணியின் தலைவராகச் செயற்படுவதனை ஒரு போதும் ஏற்க முடியாது


'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையானது புத்திஜீவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்கும்போது, முன்னதாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நபரொருவர் அந்தச் செயலணியின் தலைவராகச் செயற்படுவதனை ஒரு போதும் ஏற்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.