Header Ads



எமது கத்தோலிக்க நிஜபூமியை விற்பனை செய்ய இடமளியோம் - காவிந்த எம்பி


- Ismathul Rahuman -

      இந்த நாட்டு கத்தோலிக்க மக்களின் நிஜபூமியை விற்பனை செய்ய இடம் தரமாட்டோம் என  நீர்கொழும்பு களப்பு முதல் பேலியகொடை வரையான ஈரலிப்பு பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரருவற்காக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சனிக்கிழமை மாலை நீர்கொழும்பு, முன்னக்கரை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நீர்கொழும்பு அமைப்பாளரும் பாராளமன்ற உறுப்பினருமான டாக்டர் காவிந்த ஜயவர்தன கூறினார். 

    காவிந்த இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்  கத்தோலிக்க மக்களின் நிஜபூமியான இப்பிரதேசத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவர அதிமேதகு ஜனாதபதி

 வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நாம் கோடாபய ராஜபக்ஷவுக்கு சொல்வது இந்த நாட்டு கத்தோலிக்க மக்களின் நிஜபூமியை உங்களுக்கு கையகப்படுத்த இடம் தரமாட்டோம்.  இப்பிரதேசத்தில் வாழும் அப்பாவி மீனவமக்களின் இடங்களை, கத்தோலிக்க தேவஸ்தானங்களை கொள்ளையடிக்க ராஜபக்ஷாக்களுக்கு இடம்தரமாட்டோம்.

 முன்னக்கரை மக்கள் விளையாடுவதற்காக மைதானம் கேட்டபோது அவர்களுக்கு எதிராக வழக்குப் போட்டார்கள்.

   இந்த அரசு நீர்கொழும்பிலிருந்து பேலியகொடை வரையான கத்தோலிக்க நிஜபூமியை  சீனா கம்பனிகளுக்கும், கொரியா கம்பனிகளுக்கும் விற்பனை செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்துக்கொள்ள எத்தனிக்கின்றனர்.

  பேராயர் காதினல் மல்கம் ரன்ஜித் அவர்கள் என்னுடன் பேசினார். அவர் கூறினார் காவிந்த பயமில்லாமல் இந்தப் போராட்டத்திற்கு முன்வாருங்கள். உங்களுக்கு தேவையான பலத்தை கத்தோலிக்க பிதாக்கள் பெற்றுத்தருவார்கள். வீடுவீடாகச் சென்று கத்தோலிக்க மக்களை அறிவுறுத்துங்கள்.

  எங்களை அன்று குண்டுத்  தாக்குதல் செய்து அப்பாவி மக்களின் உயிர்களை காவுகொண்டார்கள். தற்போது எமது பள்ளிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

கொரியா கம்பனிக்கு 500 மில்லியன் டொலருக்கு 3000 ஏக்கரை விற்பனை செய்ய முற்படுகின்றனர். எமது அப்பாவி மக்களின் வீடுகளை தகர்தெறிந்து எம்மை இங்கிருந்து விரட்டியடித்து அவர்கள் டொலர் சம்பாதிக்க முயற்சிப்பதாயின் நாம் அதற்கு இடமளிக்கமாட்டோம்.

  எமது மக்களின் உரிமைகளையும் காணிகளையும் பாதுகாக்க  நான் நியுமன் மந்திரியுடன் சென்று உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுத்துள்ளேன். அதுமாத்திரமன்றி காதினல் மல்கம் ரன்ஜித் அவர்களும் வழக்குத் தொடுத்துள்ளார். இந்தப் போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம் என்றார். 

No comments

Powered by Blogger.