Header Ads



ஞானசாரரின் செயலணி - பாராளுமன்றத்தில் அநுரகுமாரவின் கேள்விகளால் திண்டாடிய ஆளும் தரப்பு


இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ”ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி தொடா்பில் வெளியிடப்பட்ட வா்த்தமானி அறிவித்தலை, தாம் பாா்த்தவேளையிலேயே நாட்டின் பிரதமா் மஹிந்த ராஜபக்சவும் பாா்த்திருக்கவேண்டும் என்று ஜேவிபியின் தலைவா் அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

ஏனெனில் அவா் இந்த வா்த்தமானி தொடா்பில் முன்னதாகவே அறிந்திருக்கவில்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையின் நீதியமைச்சருக்கு தொியாதநிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி தொடா்பில், நாடாளுமன்றத்தில் பிரதமாிடம் விளக்கம் கோாியபோது, பிரதமா் வழங்கிய பதிலில் திருப்தியடையவில்லை என்று கூறியபின்னரே அனுரகுமார திசாநாயக்க, தமது இந்தக்கருத்தை வெளியிட்டாா்.

எனினும் இதன்போது பதிலளித்த பிரதமா் மஹிந்த ராஜபக்ச, இந்த செயலணி தொடா்பான வா்த்தமானி அறிவித்தல் தொடா்பில் தாம் ஏற்கனேவே அறிந்திருந்ததாக குறிப்பிட்டாா்.

இந்தப்பதிலை கேள்வியாக மாற்றிய அனுரகுமார திசாநாயக்க, அப்படியானால், இந்த செயலணியின் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தொடா்பில் பிரதமாின் இணக்கம் பெறப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினாா்.

எனினும் அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் உாிய பதில் வழங்கப்படவில்லை.

குறித்த செயலணியின் தலைவர், மற்றும் உறுப்பினா்கள் எந்த தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டனா் என்ற அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கே பிரதமருக்கும் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இந்த கருத்தாடல்கள் இடம்பெற்றன.

பிரதமாிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, பிரதமருக்கு பதிலாக அவையின் தலைவா் அமைச்சா் தினேஸ் குணவர்த்தன மற்றும் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சா் சரத் வீரசேகர ஆகியோரும் அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதில் வழங்கினா்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் இந்த செயலணியும் அதற்கான உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டதாக அவா்கள் குறிப்பிட்டனா்.

இதன்போது குறுக்கிட்ட அனுர குமார திசாநாயக்க, நீதியமைச்சருக்கு அடுத்ததாக பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் இந்த செயலணி தொடா்பான தெளிவுப்படுத்தப்படவில்லை என்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது என்று குறிப்பிட்டாா். Twin

No comments

Powered by Blogger.