Header Ads



சதொசவில் எந்த வகையான பொருட்களை, எப்படி கொள்வனவு செய்ய முடியும்..??


சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு  பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது 
கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

இந்த நடைமுறை இன்று (6) முதல் அமுலாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 04 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

அதன்படி, சதொசவில் அரிசி மற்றும் சீனி என்பவற்றை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக  5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அரிசி, சீனி, மஞ்சள் போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றுடன் மேலும் 5 பொருட்களையேனும் கொள்வனவு செய்யாவிட்டால், அரிசி மற்றும் சீனியை மாத்திரம் விற்பனை செய்யும் கொள்கை பின்பற்றப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று முதல் குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

சந்தையில் நிலவும் விலையை விடவும், குறைந்த விலையில் 15 பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த 15 பொருட்களிலும், 5 பொருட்களைத்தான் தாம் கொள்வனவு கூறியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நுகர்வோர் இன்று முதல் எந்தவொரு கட்டுப்பாடுமின்றி, தங்களுக்கு விரும்பமாயின், குறித்த 15 பொருட்களையும் கொள்வனவு செய்து, ஆயிரம் ரூபாவை விடவும் குறைந்த சலுகையைப் பெறமுடியும்.

இல்லாவிட்டால், தங்களுக்கு அவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, நுகர்வோருக்கு வழங்கப்படும் அளவு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நுகர்வோர் ஒருவருக்கு, 3 கிலோகிராம் பச்சை அரிசி, 3 கிலோகிராம் நாட்டரிசி என 6 கிலோகிராம் வழங்கப்படும்.

அத்துடன், 2 கிலோகிராம் வெள்ளை சீனி, 3 கிலோகிராம் சிவப்பு சீனி என 5 கிலோகிராம் சீனி நுகர்வோர் ஒருவருக்கு வழங்கப்படும்

தற்போது இருக்கின்ற அளவை, நாளாந்தம் சந்தைக்கு வரும் நுகர்வோருக்கு வழங்குவதற்காக பேண வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த நபரின் முகத்தைப் பார்க்கும் போது இந்த நாட்டின் பொருளாதாரம் ஒருபோதும் உருப்படியாக மாட்டாது என்பது தௌிவாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.