Header Ads



சர்வதேச ஆசிரியர் தினமான இன்றைய நாளை, கறுப்பு தினமாக பிரகடனப்படுத்திய தொழிற்சங்கங்கள்


சர்வதேச ஆசிரியர் தினமான இன்றைய -06- நாளை, கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி, நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாக கோரிகை விடுத்து வருகின்றனர். எனினும், பிரச்சினைகளைத் தீர்க்காது, அரசாங்கம் காலந்கடத்தி வரும் நிலையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 80 நாள்களுக்கு மேலாக அதிபர், ஆசிரியர்கள் நடாத்தி வரும் பணிபகிஷ்கரிப்பையும் கண்டுக் கொள்ளாத அரசாங்கம் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை இதுவரை வழங்கவில்லை. எனவே சம்பள முரண்பாட்டிற்கான தீர்வினை உடன் பெற்றுத்தர வேண்டுமெனக் கோரியே அதிபர்- ஆசிரியர் இத்தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

கொவிட்- 19 கொரோனா தொற்றின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக குறைந்த அளவிலானவர்களின் பங்குபற்றுதலோடு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.


No comments

Powered by Blogger.