Header Ads



ஆசிரியர்களின் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நாங்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும் - சரத்வீரசேகர


21 ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்போது கடமைக்கு திரும்ப நினைக்கும் ஆசிரியர்களை தடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம் குறைவு என்றால் நாங்கள் அதனை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அதேவேளை நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்பதையும் நியாயமான நியாமற்ற காரணங்களிற்காக பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ள அமைச்சர் தங்களிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பல ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர் பணிக்குதிரும்பும் ஆசிரியர்களை அச்சுறுத்துபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை அச்சுறுத்துபவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வாய்மூல அச்சுறுத்தலை விடுப்பவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆசிரியர்கள் மிகவும் முனைப்புடனும்,நுணுக்கமாகவும் தீர ஆலோசனை செய்து அவர்களுடைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தலையில்லாத எருமைகள் அதிகாரத்தில் இருக்கும் போது ஆசிரியர் சமூகம் எருமையின் செயற்பாடுகள் பற்றி முனைப்புடன் செயல்படாது போயின் மீண்டும் அவர்களை அவமானப்படுத்தவும் கேவலப்படுத்தவும் எருமை தயங்கமாட்டாது.எருமைக்கு மனிதர்களுக்கு உரிய எந்த பண்புகளும் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.