Header Ads



ஜனாதிபதியின் மேலான கவனத்திற்கு, வடக்கு முஸ்லிம்கள் விடுத்துள்ள கோரிக்கை


1990ஆம் ஆண்டு துப்பாக்கி முனையில் வடக்கில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சமூகம் - 31 வருடங்கள் கடந்தும் இன்றுவரையில் தொடரும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்கு                                                   

              இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாக இருக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை  நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். எமது வடக்கு முஸ்லிம் மக்கள் தொடர்பான முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்கு  நேரம் ஒதுக்கித்தருமாறு இந்த முப்பத்தோராவது ஆண்டு நிறைவு சந்தர்ப்பத்தில் கோருகின்றோம்.

 30வருட யுத்தம் பல இழப்புக்ககளுக்கும் தியாகத்திற்கு மத்தியில் சிறப்பான வழிநடத்தலினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. உள்நாட்டுப் போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகின்றன, ஆனாலும் 'நல்லாட்சி' என்று ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் இன்னும் வடக்கிலிருந்து ஆயூத முறையில் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களின் தீர்க்கப்பட்டதாக இல்லை. மேலும் பண்பாட்டு-அரசியல் ,கலாசார விடயங்களிலும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன, இவ்வாறாக இடம்பெயர்க்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் அவல நிலை தொடர்ந்தும் நீடிக்கிறது.

  எனவே         பின்வரும் தலைப்புகள் தொடர்பாக, புத்தளம் வாழும் வெளியேற்றப்பட்ட சிவில்சமூகம் சார்பாக கௌரவ அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களை சந்திக்க நேர ஒதுக்கீட்டை செய்து தருமாறு வேண்டுகின்றோம்.வெளியேற்றப்பட்டு முப்பத்தோராவது வருட பூர்த்தியான நிலையில்   சந்திப்பதற்க நேர ஒதுக்கீட்டை கோருகின்றோம் 

  *வடக்கில் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் உண்மை நிலையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை உருவாக்குதல்.

* திட்டமிட்டுபடி வடமாகாணத்திருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை முறையாக மீள்குடியேற்றத்தை நடைமுறைப்படுத்தல்.                           

 * வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க ஏதுவான முறையான திட்டத்தை  நடைமுறைப்படுத்தல்.                            

* பல தசாப்தங்களாக நீண்டகால உள்நாட்டுப் போரில் காணாமல் போன முஸ்லிம்களுக்கு நீதி.              

* 31 ஆண்டுகளாக மீள்குடியேற முடியாமல்  தற்போது வசிக்கும் இடத்தில் இவர்களுக்கான வீட்டுத்திட்ட  உதவிகளை நடைமுறைப்படுத்தல்.                    
       

* சுய வேலைவாய்ப்புக்கான வசதிகளை வழங்குதல்.    

*அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வசதிகளை வழங்கல்                                                     

* அரசியல் மற்றும்பண்பாட்டு கலாச்சார நடைமுறைகளில்  உரிமைகளை வழங்குதல்.  

மேற்குறித்த விடயங்களை தெளிவுபடுத்த நேரத்தை ஏற்படுத்தித் தருமாறு சிவில் சமூகம் சார்பாக  கோரிக்கை விடுக்கின்றோம். 

நன்றி.                                                                                    

புத்தள வாழ் யாழ், கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூக சம்மேளனம்.                               

தலைவர் அப்துல் மாலிக் 

செயலாளர் ஹஸன் பைறூஸ்

1 comment:

  1. செயலாளரின் கோரிக்கை நியாயமானது ஆனால் அதற்காக நீங்கள் அணுகிய முறை எந்த வித பிரயோகனமும் அற்றது. அது வெறுமனே நேரத்தையும் காலத்தையும் வீணாக்குவதற்குச் சமம்.

    ReplyDelete

Powered by Blogger.