Header Ads



அலரி மாளிகையில் நவராத்திரி - சுப்பிரமணியம் சுவாமியும் பங்கேற்பு


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நவராத்திரி விழா அலரி மாளிகையில் நேற்று (12) இரவு இடம்பெற்றது.

நவராத்திரி விழாவில் இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை விசேடம்சமாகும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த ஆண்டை போன்றே இவ்வாண்டும் நவராத்திரி விழாவினை அலரி மாளிகையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சுரேன் ராகவன், மருதபாண்டி ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், முன்னாள் பிரதம நீதியரசர் கனகசபாபதி ஸ்ரீபவன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமர் அலுவலகத்தின் பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. பொதுமக்களை ஏமாற்றும் திட்டத்தில் இந்து சமயததையும் சும்மா விட்டு வைக்கவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.