Header Ads



அசாத் சாலியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு


தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை, எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தினூடாக, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அசாத் சாலியின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில், மார்ச் 16 ஆம் திகதி, குற்றப் புலனாய்வு திணைக்கத்தினரால் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, தடுப்புக்காவல் உத்தரவின் பேரில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவர், ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


1 comment:

  1. மிகப் பயங்கரவாத கொலைகாரன்களும், கேடிகளும் சுதந்திரமாக சிறையிலிருந்து விடுதலையாகும் போது, அவரகளின் குற்ற வழக்குகள் தூக்கி வீசப்படும் போது எந்தக் குற்றமும் செய்யாத வாய்ப்பேச்சு தவறிய ஒரே குற்றத்துக்காக சிறையில் பல மாதங்கள் வருடங்கள் சிறைவைப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.