Header Ads



இந்திய முஸ்லிம்களை விட்டுவிடுங்கள் - தலிபான்களுக்கு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் பதில்


- திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது -

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், இரு பாலர் கல்வி நடைமுறையை ரத்து செய்துள்ளனர். தலிபான் தலைவர்களில் ஒரு தரப்பினர், இந்தியாவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித் துள்ளனர். ஆனால் வேறு சிலர், காஷ்மீர் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புவோம் என்று கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் கூறும்போது, "இந்திய முஸ்லிம் களை விட்டுவிடுங்கள் என்று தலிபான்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய மசூதி களில் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகளால் யாரும் கொல்லப்படுவது கிடையாது. மாணவிகள் பள்ளிக்கு செல் வதை யாரும் தடுப்பது இல்லை. அரசமைப்பு சாசனத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் ஆட்சி நடத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ருங்கலா  கூறும்போது, "இந்தியா சார்பில் தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்திய விவ காரங்களில் பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நிலவரத்தை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.


1 comment:

  1. இந்தியாவில் முஸ்லிம்கள்? அட முட்டாளே மோடிக்கு அடி பணிந்து இருக்கும் கூட்டம்

    ReplyDelete

Powered by Blogger.