Header Ads



எமது சங்கத்தினர் எவரும், சீனியை பதுக்கி வைத்திருக்கவில்லை - சீனி இறக்குமதியாளர்கள் சங்கம்


தமது சங்கத்தினர் எவரும் சீனியை பதுக்கி வைத்திருக்கவில்லை எனவும் அவை சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் உபதலைவர் நிஹால் செனவிரத்ன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த நாட்களில் நுகர்வோர் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 29 ஆயிரம் மெற்றிக் டன் சீனி மீட்கப்பட்டது.

ஒரு கிலோகிராம் சீனியின் விலை 220 ரூபாவாக அதிகரித்தது.

இந்தநிலையில் இறக்குமதியாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும் நேற்று முதல் அமுலாகும் வகையில் அரசாங்கத்தினால் சீனி மற்றும் அரிசி என்பவற்றிற்கான அதியுட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது.

3 comments:

  1. ஆம் சீனி இறக்குமதி செய்பவர்கள் ஒரு போதும் அவற்றைப் பதுக்கி வை்ப்பதில்லை.அவர்கள் வியாபாரத்துக்கு மாத்திரம்தான் அவற்றை இறக்குமதி செய்வார்கள். அப்படியானால் இந்த அரசாங்கத்தின் வருகையுடன் வேற்று கிரகத்தில் வாழும் பதுக்கல்காரர்கள், இலங்கையில் இறங்கியிருக்கவேண்டும். அந்த விஷமிகள் தான் இந்த கருமித்தனத்தைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுபற்றி விசாரித்து ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள முடியாது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலை பற்றிய சரியான உண்மை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என ஞானசாரர் கூறியது போல இதுவும் வேற்று கிரகத்துடன் தொடர்புடையதால் அங்கு எங்கள் தூதுவர் காரியாலயம் இல்லை என்றபடியால் அந்த உண்மையை வௌிப்படுத்த முடியாது என்பது தான் இறுதி முடிவு.

    ReplyDelete
  2. ஆம் சீனி இறக்குமதி செய்பவர்கள் ஒரு போதும் அவற்றைப் பதுக்கி வை்ப்பதில்லை.அவர்கள் வியாபாரத்துக்கு மாத்திரம்தான் அவற்றை இறக்குமதி செய்வார்கள். அப்படியானால் இந்த அரசாங்கத்தின் வருகையுடன் வேற்று கிரகத்தில் வாழும் பதுக்கல்காரர்கள், இலங்கையில் இறங்கியிருக்கவேண்டும். அந்த விஷமிகள் தான் இந்த கருமித்தனத்தைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுபற்றி விசாரித்து ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள முடியாது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலை பற்றிய சரியான உண்மை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என ஞானசாரர் கூறியது போல இதுவும் வேற்று கிரகத்துடன் தொடர்புடையதால் அங்கு எங்கள் தூதுவர் காரியாலயம் இல்லை என்றபடியால் அந்த உண்மையை வௌிப்படுத்த முடியாது என்பது தான் இறுதி முடிவு.

    ReplyDelete
  3. ஆம் சீனி இறக்குமதி செய்பவர்கள் ஒரு போதும் அவற்றைப் பதுக்கி வை்ப்பதில்லை.அவர்கள் வியாபாரத்துக்கு மாத்திரம்தான் அவற்றை இறக்குமதி செய்வார்கள். அப்படியானால் இந்த அரசாங்கத்தின் வருகையுடன் வேற்று கிரகத்தில் வாழும் பதுக்கல்காரர்கள், இலங்கையில் இறங்கியிருக்கவேண்டும். அந்த விஷமிகள் தான் இந்த கருமித்தனத்தைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுபற்றி விசாரித்து ஒருபோதும் உண்மையை அறிந்து கொள்ள முடியாது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலை பற்றிய சரியான உண்மை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை என ஞானசாரர் கூறியது போல இதுவும் வேற்று கிரகத்துடன் தொடர்புடையதால் அங்கு எங்கள் தூதுவர் காரியாலயம் இல்லை என்றபடியால் அந்த உண்மையை வௌிப்படுத்த முடியாது என்பது தான் இறுதி முடிவு.

    ReplyDelete

Powered by Blogger.