Header Ads



பஸ் பயணத்தின் போது கொவிட் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது கட்டாயம் - புதிய சட்டம் வரப் போகிறதா..?


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான தடுப்பூசி அட்டை இல்லாதவர்களை பஸ்களில் ஏற்றுவதை நிறுத்துவதற்கு அடுத்த மாதம் முதல் மேல் மாகாணத்தில் புதிய சட்டம் அமுல் படுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப் படுவதுடன் சட்டம் சரியாகப் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாகாண பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையைத் தாம் கையில் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் பயணிகள் பஸ்களில் ஏறும் போது தடுப்பூசி செலுத்திய அட்டையைச் சரிபார்ப்பதற்கு நடத் துனருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது. Thinakkural

No comments

Powered by Blogger.