Header Ads



இளைஞர் யுவதிகளுக்கு என விசேட தடுப்பூசி இல்லை - சகலதும் தரம் வாய்ந்தவையே.


தடுப்பூசி ஏற்றிக்கொள்ளல் தொடர்பில் பொதுமக்களை ஊக்குவிக்கும் முழுப் பொறுப்பும், பொது சுகாதார பரிசோதகர்களுக்குரியது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனவிடம், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கொவிட் பரவல் செயலணி கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

இதன்போது தெரிவு செய்யப்பட்ட தடுப்பூசிகளை மாத்திரமே இளைஞர் யுவதிகள் எதிர்பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது என்றும் அவர்களுக்கென விசேட தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தவில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் தெரிவித்தனர். 

நாட்டு மக்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை. கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் விசேட தடுப்பூசியொன்று கிடைக்கும் வரை காத்திருக்காது, அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டுமென வலியுறுத்தினர். 

சிக்கல் நிலையுடன்கூடிய கொவிட் நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளில், கொரோனா சிகிச்சை நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.