Header Ads



நீதிபதியின் விசித்திரத் தீர்ப்பு - சிறுமியை அழைத்து வந்த தரகர் விடுதலை, ரிஷாட், அவரது மனைவி மற்றும் அவரது தந்தைக்கு தொடர்ந்து விளக்கமறியல்


பாரளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அவரது மனைவி  மற்றும் அவரது தந்தை ஆகிய சந்தேக நபர்கள் 3 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் இன்று(06) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் வழக்கு தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. உமக்கு அறிவு மழுங்கி விட்டதா? நடந்து கொண்டிருக்கும் வழக்கு சம்பந்தமான தீர்ப்புகளை விமர்சிப்பது குற்றம். நடுநிலையாக இருக்க முயற்சி செய்யும். றிஷாட்டுக்கும் அவரது குடும்பத்திற்கும் கூஜா தூக்குவதை விட்டு விடும். முடிந்தால் இந்த பதிவை பிரசுரியும்!

    ReplyDelete
  2. as long as racism prevails there is no justice for minorities in this country.

    ReplyDelete

Powered by Blogger.