Header Ads



ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் - பிரதமரிடம் இருந்து பறந்த உத்தரவு


நாட்டில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு ​மோசடி தொடர்பில் அம்பலப்படுத்திய தேசிய பத்திரிக்கைகள் சிவற்றின் பத்திரிகை ​ஆசிரியர்கள், பத்திரிக்கையான லங்காதீபவின் பத்திரிகை ஆசிரியர், ஊடகவியலாளர்கள் சிலரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில், இன்று (28) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் ​பேச்சாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு உத்தரவிட்டுள்ளார் என்றார்.


1 comment:

  1. இதற்குப் பெயர் நாடகத்துக்கு மேல் உள்ள பெரிய நாடகம்.

    ReplyDelete

Powered by Blogger.