Header Ads



சிறைச்சாலைக்குள் லொஹான் அடாவடி செய்த விவகாரம் - விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தார் அலி சப்ரி


சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுப் பெற்ற நீதிபதி குஷலா சரோஜினி வீரவர்தனவே, நீதியமைச்சினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு தன்னுடைய சகாக்களுடன் போதையில் சென்றிருந்த சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, அதிலொரு கைதியின் தலையில் கைத்துப்பாக்கிய வைத்து சுட்டுப் பொசுக்கிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.

அத்துடன், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் நள்ளிரவுவேளையில் சென்றிருந்த அவர், தூக்குமேடையை பார்வையிட்டுள்ளார். இதன்போது, அவருடைய சகாக்கள் இருந்துள்ளனர்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுப்பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என அரசாங்கமும் நீதியமைச்சும் நேற்று (22) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஏனைய நாடகங்களைப் போன்று நாடகங்களின் மற்றுமொரு கட்டமாகத்தான் இதுவும் அமையப் போகின்றது என பொதுமக்கள் கதைக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.