Header Ads



ஈஸ்டர் தாக்குதல் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் - அடிப்படைவாத, இனவாத அமைப்புக்களை உடனடியாக தடைசெய்க - ஞானசாரர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப்போல மீண்டுமொரு தாக்குதல் நாட்டில் நடத்தப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் இன்று வியாழக்கிழமை -09- விசேட கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிவில் மற்றும் நபர்களின் ஊடாக பாதுகாப்பு பிரிவை அதைரியப்படுத்தும் வகையிலான முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதனூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதற்கான சூழ்ச்சி நாட்டிற்குள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் இருப்பதாக அந்தக்கடிதத்தில் பொதுபல சேனா குறிப்பிட்டுள்ளது.

மேலும், மிகச்சிறிய பாதுகாப்பு விரிசலைப் பயன்படுத்தி அதனூடாக ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை நடத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டுவது போன்ற பாரிய ஆபத்து நாட்டிற்கு முன்பாக இருக்கின்றது என்றும் ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளியெறியத்தக்கதாக பாதுகாப்புக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான அவசியத்தையும் அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நாட்டில் செயற்படுகின்ற மேலும் சில அடிப்படைவாத மற்றும் இனவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.    IBC

4 comments:

  1. சிறுபான்மைக்கெதிரான மற்றொரு அடக்குமுறைக்கு இவன் தற்போது கதை புனைகின்றான்.அரச கொன்ரக் செய்வதில் இந்த ஹராமி கைதேர்ந்த காபிர்.

    ReplyDelete
  2. இவனுக்கு இதுதான் வேலை.உடன்பிறப்புகள் நோயினால் இறக்கின்றன. பொருளாதார கஸ்டத்தில் மிக நெருக்கடியில் மக்கள் அல்லல் படுகிறார்கள்.இதை எல்லாம் கதைக்க மாட்டான். இனவாதம் எனும் ரத்தம்தான் இவனில் ஓடுகிறது.சிறுபான்மையினரும் நிம்மதியாக வாழ முடியாது.நாடு ம் உருப்படுவது சந்தேகம்தான்.நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete
  3. Paaduhaappu padaihal pala irunthum .ipdiyana vidyangalai yaarum iduwarai kandariyavillai but ivan eppa paathalum ide newstan solran .so srilankavula nadantha anaithu kolappamum ivanum ivanda pinnal irikira arasiyal vaadihalda welayumtan.so ivanukku viravil covit vanthu saavura naal vehu thoaivil illlai.

    ReplyDelete

Powered by Blogger.