September 06, 2021

எங்கள் மதத்தை மிகவும் நேசிக்­கிறோம், எவ­ரது மதத்­தையும் அவ­ம­திப்­புக்­குள்­ளாக்க வேண்டாம் - கொரோனாவால் வபாத்தான டாக்டரின் உருக்கமான பதிவு


- ஏ.ஆர்.ஏ.பரீல் -

‘நாங்கள் எங்கள் மதத்தை மிகவும் நேசிக்­கிறோம். இதே­போன்று ஏனை­யோரும் அவர்­க­ளது மதங்­களை நேசிக்­கி­றார்கள். அதனால் எவ­ரது மதத்­தையும் அவ­ம­திப்­புக்­குள்­ளாக்க வேண்டாம்.’ இது கொவிட் தொற்­றினால் வபாத்­தான இளம் டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனானின் முகநூல் பதி­வொன்­றாகும்.

‘டாக்டர் ஜனான் எனது சகோ­தரர். அவர் வைத்­தி­ய­சா­லையில் இரு வாரங்கள் வரை சிகிச்சை பெற்றார். இந்த இரு வாரங்­களில் அதி­க­மான நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரி­விலே சிகிச்சை பெற்றார். அவ­ரது நிலைமை சீரா­கி­யி­ருந்­தது. அவரை வீட்­டுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்றே நாம் எண்­ணி­யி­ருந்தோம். ஆனால் அவ­ருக்கு வருத்தம் என்று டாக்­டர்கள் கூறி­னார்கள். அவரை காப்­பாற்­று­வ­தற்­காக டாக்­டர்கள் அதி­காலை 2 மணி­யி­லி­ருந்து மறுநாள் காலை­வரை முயற்­சித்­தார்­கள. அவ­ரது உயிரைப் பிடித்­துக்­கொண்டே இந்த சில மணி­நேரம் இருந்­தார்கள்.

வயது சென்று எனது தம்பி இறந்­தி­ருந்தால் எமக்கு கவலை இருக்­காது. இறை­வனே சாப்­பிட இல்­லாது விட்­டாலும் பர­வா­யில்லை. இவ்­வா­றான நோய்­களை மட்டும் மனி­தர்­க­ளுக்கு கொடுக்­காதே. நாங்கள் எல்­லோரும் மனி­தர்கள். எதி­ரி­க­ளுக்குக் கூட இவ்­வா­றான நோய்­களைக் கொடுக்­காதே என்றே இறை­வ­னிடம் கேட்­கிறோம்.’ என்று டாக்டர் ஜனானின் மூத்த சகோ­தரர் கண்ணீர் மல்க தெரி­வித்தார்.

டாக்டர் மர்ஹூம் ராசிக் மொஹமட் ஜனான் மத­வாச்சி நேரிய குளத்தில் பிறந்­தவர். நாட்டில் அப்­போது நில­விய அசா­தா­ரண நிலைமை கார­ண­மாக அவ­ரது குடும்பம் கம்­ப­ளைக்கு குடி­பெ­யர்ந்­துள்­ளது. கம்­பளை சாஹிரா கல்­லூ­ரியில் பயின்ற அவர் வைத்­திய பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டு டாக்­ட­ரா­கி­யுள்ளார். திரு­மணம் செய்து கொண்­டதன் பின்பு கம்­பளை பகு­தியில் வீடொன்­றினை நிர்­மா­ணித்துக் கொண்­டுள்ளார். அப்­போது அவர் கம்­ப­ளை­யிலே கட­மை­யாற்­றினார்.

அவர் தமி­ழர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­யிலும் கட­மை­யாற்­றி­யுள்ளார். இவர் ஓர் முஸ்­லி­மாக இருந்த போதிலும் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள் என அனை­வ­ரு­டனும் நட்­புடன் பழ­கி­யுள்­ள­தாக அவ­ரது நண்­பர்கள் தெரி­விக்­கி­றார்கள். பிளாஸ்ரிக் சத்­தி­ர­சி­கிச்சை தொடர்­பான வைத்­தியர் என்­றாலும் சாதா­ரண டாக்­ட­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். ஏனைய இனத்­த­வர்­களின் சம­யங்கள், கலா­சா­ரங்­களை அவ­ம­திக்கும் வகையில் ஒரு­போதும் செயற்­பட்­ட­தில்லை. சிங்­கள, தமிழ் புத்­தாண்டு விழாக்­களில் கலந்­து­கொண்டு கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் போன்ற விளை­யாட்­டு­களில் பங்குபற்றி சிங்­கள, தமிழ் மக்­க­ளுடன் நட்­பு­ற­வுடன் பழ­கி­யுள்ளார். இதனால் அவர் ஏனைய இனத்­த­வர்கள் மத்­தியில் பிர­பல்­ய­ம­டைந்­துள்ளார்.

இவர் ராகம வைத்­தி­ய­சா­லையில் பிளாஸ்ரிக் சத்­தி­ர­சி­கிச்சை டாக்­ட­ராக 2016இல் நிய­மனம் பெற்றார். அக்­டோபர் மாதம் பத­வி­யேற்ற அவர் என்­ட­ர­முல்ல பகு­தியில் வீடொன்­றினைப் பெற்று குடும்­பத்­துடன் வாழ்ந்தார். இரண்டு ஆண் பிள்­ளைகள் மற்றும் 3 மாத கால வய­து­டைய பெண் குழந்­தைக்கு அவர் தந்­தை­யாவார்

டாக்டர் ஜனான் கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி மூன்று வாரங்­க­ளுக்கு முன்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவர் ராகம வைத்­தி­ய­சா­லையில் நான்கு தினங்கள் மாத்­தி­ரமே அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். ஆரம்­பத்தில் அவர் கொவிட் 19 தொற்­றினால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இத­னாலே அங்கு அனு­மதி பெற்­றி­ருந்த ஏனைய நோயா­ளர்­களை மகிழ்­விக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருக்க வேண்டும். அவர் அங்கு பாட்டுப் பாடி மகிழ்­வித்தார் என அங்கு கட­மை­யாற்­றிய சுகா­தார சேவை ஊழி­யர்கள் தெரி­வித்­தனர்.

கொவிட் 19 தொற்று நிலைமை மோச­மா­கி­ய­தனால் அவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார். சுவா­சிப்­பதில் சிரமம் ஏற்­பட்­ட­த­னா­லேயே அவர் இப்­பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார். இப்­பி­ரிவில் 10 தினங்கள் அவர் சிகிச்சை பெற்றார். என்­றாலும் டாக்­டர்­களால் அவரைக் காப்­பாற்ற முடி­யாமற் போனது. அவ­ரது இத­யத்­துக்குச் செல்லும் இரத்த நாளங்­களில் இரத்தம் தடை ஏற்­பட்­ட­த­னாலே மரணம் சம்­ப­வித்­த­தாக டாக்­டரின் சகோ­தரர் தெரி­வித்தார்.

‘எங்கள் குழுவில் கட­மை­யாற்­றிய இவ்­வா­றான திற­மை­யான டாக்டர் திடீ­ரென கால­மா­கி­யமை ராகம வைத்­தி­ய­சா­லைக்கு மாத்­தி­ர­மல்ல முழு நாட்டின் மக்­க­ளுக்கும் பேரி­ழப்­பாகும்’ என ராகம வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் டாக்டர் சம்பத் லிய­னகே தெரி­வித்தார்.

என்­றாலும் வைத்­தியர் என்ற வகையில் சமூ­கத்­துக்கு உதாரணமாக செயற்பட வேண்டிய அவர் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என்பது தொடர்பில் அவரது நண்பர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனாலே டாக்டர் ஜனானுக்கு இந்நிலைமை ஏற்பட்டதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான காரணம் தெரியவில்லை. கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் தாமதியாது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை டாக்டர் ஜனானின் மறைவு உறுதிப்படுத்துகிறது.

நன்றி : ஞாயிறு லங்காதீப, – Vidivelli

2 கருத்துரைகள்:

No I read he had both his Pfizer jabs

اللهم إغفرلهم وعافيهم وعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم اللهم إجعل قبورهم روضة من رياض الجنان ولاتجعل قبورهم حفرة من حفر النيران،

Post a Comment