Header Ads



நாட்டில் டொலர் பற்றாக்குறை, எரிபொருள் கொள்முதலில் நெருக்கடி - இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற முயற்சி


எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 

இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் கொள்முதலில் நெருக்கடி உள்ளது. இதற்காக எரிசக்தி அமைச்சகம் முன்பு பல நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. 

எனினும், இந்தியாவில் இருந்து குறித்த கடன் தொகையை பெறுவதற்கான நிபந்தனைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்று அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

  1. சீனா செய்வதை போன்று, இந்தியாவும் கொடுக்கும் கடன்களுக்காக இலங்கையின் பகுதிகளை பெறவேண்டும்

    ReplyDelete
  2. இந்த நெருக்கடிக்கு முன்னணிக்காரணம் இலங்கை அரசாங்கத்தின் முகாமைத்துவமில்லாத எதேட்சாததிகாரப் போக்காகும்.எனவே தற்காலிகமாக பிச்சை வாங்கி பெற்றோல் கொள்வனவு செய்து அடுத்த மாதம் பெற்றோல் வாங்க திரும்பவும் கடன் பெற்று அந்தக் கடனை திருப்பிச் செலுத்த மற்றொரு கடன் வாங்கும் இந்த வங்கரோத்து அரசாங்கத்துக்கு யாரும் அனுதாபப்படமாட்டார்கள். எனவே உடனடியாக மன்னார் சென்று பத்து குடும்பத்துக்கு ஒரு கழுதையாவது ஏற்கனவே முற்பணம் செலுத்தி ஆடர் பண்ணினால் ஒரளவுக்கு தலை தப்பலாம். அது தான் தற்போது உள்ள தீர்வு. எனவே ஒவ்வொரு குடும்பமும் ஒரு கழுதையை வளர்க்க ஆரம்பிப்போம்.

    ReplyDelete
  3. I have some 1 or 2 dollars under the glass of my hotel cashier, i can give for relief

    ReplyDelete

Powered by Blogger.