Header Ads



இரத்மலானை பள்ளிவாசலின் முன்மாதிரி - இன்று முழுநாளும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது, ஏனைய இடங்களிலும் பின்பற்றப்படுமா..?


(அஷ்ரப் ஏ சமத்)

இரத்மலானை பிரதேசத்தில் உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் கல்கிசை பொலிஸாா், மற்றும் இரத்மலானை பொது சுகாதாரப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்ட  கொவிட் 19 நோய்தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (07.09.2021) பள்ளிவாசலில் முழு நாளும் இடம்பெற்றது.  கொழும்பு மாவட்டத்தில் வாழும்  சகல இனங்களும்  கலந்து கொண்டு  இரத்மலானை முதலாம் லேனில்  உள்ள ஜூம்ஆப் பள்ளிவாசலில் 350க்கும் மேற்பட்டோா்  கொவிட் 19 வக்சினைப் பெற்றுக் கொண்டனா் இங்கு சீன உற்பத்தியான சைனாபாம்  முதலாம் இரண்டாம் தடுப்பூசிகள் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. 

இங்கு கருத்து தெரிவித்த ரத்மலானை சுகாதாரப் பொறுப்பதிகாரி  டொக்டா் ரத்மலானை - தெகிவளை கல்கிசைப் பிரதேசங்களில் உள்ள மூவின மத ஸ்தாபாணங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்ட வக்சின் அளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. இதுவே முதல் தடவை தெகிவளை கல்கிசை பிரதேசத்தில் இரத்மலானை ஜூம்ஆப் பள்ளி வாசல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும்.  இந் நிகழ்வில் பெருமளவிலான முஸ்லிகள் வக்சினை ஏற்றிக் கொண்டனா்.  சகல இனங்களும் இணைந்து அரசாங்க திட்டத்திற்கு இவ்வாறு உதவி அளிப்பது, சிறந்ததாகும்.  .இதனை ஏனைய பள்ளிவாசல்களும் ஏற்பாடு செய்தால் முஸ்லிம்கள் பெருமளவில் தமது கொவிட் வக்சினைப் பெற்றுக் கொள்வாா்கள்  எனக் கூறிப்பிட்டாா்



No comments

Powered by Blogger.