Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - ஒரு இலட்சம் தொலைபேசி உரையாடல்கள் குறித்து இதுவரை ஆராயப்பட்டுள்ளது


ப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்து வெளியிடப்படும் பல்வேறு நிலைப்பாடுகளில் உண்மை தன்மையில்லை என காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

காவல்துறை மா அதிபர் மேற்கொண்ட விசேட உரையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் மாத்திரமல்லாது, அதற்கு அடிப்படையாக அமைந்த முன்னைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் 21 தாக்குதல்களானது, ஸஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட தரப்பினரின் நீண்ட காலத் திட்டமிடலின் ஒரு விளைவு மாத்திரமேயாகும்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக இதுவரையில் 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 311 பேர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஒரு இலட்சம் வரையான தொலைபேசி உரையாடல்கள் குறித்து இதுவரை ஆராயப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, இந்த தாக்குதலுக்கு ஆதரவளித்த நபர்களின் 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 165 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறைமா அதிபர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன், இந்த தாக்குதலுட்ன தொடர்புடைய 46 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் மேல்நீதிமன்றில் 11 குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் மேலும் சில குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்வதற்காக விசாரணை கோப்புகள் ஆராயப்படுவதாக காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

1 comment:

  1. நோயாளிக்கு மருந்து கொடுக்காது பல்வேறு நாடகங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி காலம்கடத்தும் ஒரு முயற்சி.

    ReplyDelete

Powered by Blogger.