Header Ads



பொதுப் போக்குவரத்தை அவசர. தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு வேண்டுகோள்


சூழ்நிலையில் பொதுப் போக்குவரத்தை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பஸ்கள் மற்றும் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோரின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளைச் சரிபார்க்க பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும்  தெரிவித்துள்ளார்.

ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிக பயணிகளை ஏற்றும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கை கடந்த வாரம் முதல் செயல்பாட்டில் உள்ளது என்றும்  குறிப்பிட்டார்.

நெரிசலைக் குறைப்பதற்காக இந்த வாரத்திலிருந்து அதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அனைத்து பயணிகள் பஸ்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து  பஸ் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், அதிக அளவான பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.