Header Ads



சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடா..? மறுக்கிறது வர்த்தக அமைச்சு


நாட்டின் சில பாகங்களில் வீட்டு சமையல் எரிவாயுவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 

எவ்வாறிருப்பினும், வர்த்தக அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், சந்தையில் வீட்டு சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நீங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. 

லாஃப் சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை தீர்த்தமை மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால், சந்தைக்கு அவசியமான எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பவற்றையடுத்து, குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 

எவ்வாறிருப்பினும், சில பிரதேசங்களில் தொடர்ந்தும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சில விற்பனையாளர்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனை விநியோகம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த சில தினங்களாக ஹட்டன் உள்ளிட்ட அதனை அண்டிய சில பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.