Header Ads



பெரியமுல்லை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணந்து, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு செய்த அன்பளிப்பு


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு, பெரியமுல்லை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணந்து தமது we are Ready வட்சப் குழுமத்தினூடாக 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு (puls oximetes) பல்ஸ் ஒக்சிமீட்டர்களை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்தனர்.

வைத்தியசாலையின் 22 இலக்க கொரோனா வார்ட்டில் 36 கட்டில்களுக்கு 8 ஒக்சி மீட்டர்தான் உள்ளன. இதனால் அதிகரித்துவரும் நோயாளிகளை பராமரிப்பதில் உள்ள கஷ்டத்தை உணர்ந்து அங்கு கடமையாற்றும் டாக்டர் ரிம்சினா முன்வைத்த கோரிக்கையை அடுத்தே we are Ready குழுமம் இந்த உதவியை செய்துள்ளது.

வைத்தியசாலையில் நிகழ்ந்த நிகழ்வின்போது குழுமத்தின் தலைவர் சரூஜ் சத்தார் வைத்தியசாலை பிரதி பணிப்பிளர் டாக்டர் சிந்தக்க பெரேராவிடம் கையளித்தார். இதில் டாக்டர் ரிம்சினா மற்றும் வட்சப் குழும அங்கத்தர்களும் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. முஸ்லிம்கள் மற்றசமயத்தவர்கள் போல் பொறாமை படுவதில்லை மற்ற சமயத்தவர்களுக்கே பெரும்பாலும் உதவி செய்து வருகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.