Header Ads



அரச பணியாளர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம்


அரச பணியாளர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. 

அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள், ஆகக்குறைந்தது வாரம் ஒன்றில் 3 நாட்கள் சேவைக்கு சமுகமளிக்கும் வகையில் குழுவொன்றை நியமித்து அக்குழுவினால் தொடர்ந்து சேவைகளை வழங்கும் வகையில் கடமைக்கு அழைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சேவைக்கு அழைக்கப்படும் குழுவில் உள்ள ஊழியரால் தமக்குரிய பணிநாளில் சமுகமளிக்கமுடியாதவிடத்து, அது அவரது தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும்.

கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்களை பணிக்கு அழைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நோய் அறிகுறிகளை கொண்டிருக்கும் அல்லது வேறெந்த நியாயமான காரணிகளால் கடமைக்கு சமுகமளிக்க முடியாதுள்ள ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அல்லது அருகிலுள்ள பணியிடம் ஒன்றில் கடமை புரியவும்  வசதிகளை அளிக்கும் தீர்மானம் நிறுவன பிரதானியால் மேற்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.