Header Ads



ஹிஷாலினிங்கிற பேர, ஹிஷானி என ஆஸ்பத்திரியில சொன்னதும் குற்றமா..?


- எஸ். ஹமீத் -

ஹிஷாலினிங்கிற பேர ஹிஷானி என்டு ஆஸ்பத்திரியில சொன்னாராம். அது ஒரு பெருஞ் சந்தேகத்த தருகுதாம். 

கல்யாண விருந்துக்குப் போன மாடு வாசல்ல நின்ற வாழைமரத்தை நக்கிட்டு  வந்து, விருந்து  பிரமாதம்னு சொல்லிச்சாம். அது மாதிரி இருக்கு இவனுங்க கண்டுபுடிக்கிற, சந்தேகப்படுற காரணங்கள். 

எத்தனை பிள்ளைங்களோட பேர்களை சொந்த அம்மாவும் அப்பாவுமே பிழையாக் கூப்பிடுறாங்கன்னு இவனுங்களுக்குத் தெரியாதா...?

மஹத்தயா அல்லது மஹத்மயாவை மாத்தயானு சொல்லிக் கூப்பிடறவங்களும் டில்ஹானியை திலானி என்பவர்களும் செல்வநாயகத்தை செல்வானு செல்லமா அழைக்கிறவங்களும் அப்துல் காதரை அத்துக்கார் என்று விளிப்பவர்களும்   ஜேசுராஜாவை ஏசுராசு என்று சொல்கிறவங்களும் வாழுற ஒரு நாட்டிலதான் நாமளும் வாழுறோமுனு தெரிஞ்சும் இந்த “இஷானியத்” தூக்கிப் புடிக்கிறவங்கள எப்புடிக் கூப்பிடறதுன்னு தெரியல. 

அதுவும் ஒரு எழுபது வயசுக் கிழவரால தன்ர மகள் வீட்டில வேலைக்கிருக்கிற ஒரு புள்ளயின் நவீன பேரைத் தன்னோட நாக்கு வளயிற அளவுக்குத்தான்  கூப்பிட முடியும். பொறப்புப் பத்திரத்தப் பார்த்து மனப்பாடமாக்கி வச்செல்லாம் கூப்பிட முடியுமா,    என்ன?

என்ர மாமாட பேர் முஹம்மது அலி. அவரை என் உம்மா மம்மலிக் காக்கா என்று கூப்பிடுவார். மொம்மலீ மச்சான்னு என் வாப்பா கூப்பிடுவார். அலினு அவரோட கூட்டாளிங்க கூப்பிடுவாங்க. மொஹமட்னும் கொஞ்சப் பேர் சொல்லுவாங்க. நாங்க மம்மோலி மாமான்னுதான் இன்னிக்கும் கூப்பிடறோம். மாமாவோட பேர சரியாச் சொல்லுங்கன்னு அவரப் பெத்த எங்க உம்மம்மாக்கிட்ட கேட்டால் அவர் சொல்லுறது மொம்மோதலி!

பெத்தவங்களுக்கே தன்னோட புள்ளைங்க பேர சரியா சொல்லத் தெரியாதப்போ, யாரோ ஒரு பொண்ணோட பேரை ஒரு வயசான முதியவர் ஒரு எழுத்தைத் தவறிச் சொன்னதைப் பெரீஈஈஈஈசாத் தூக்கிப் புடிக்கிற சட்டமேதைகளை நெனச்சு வாயால அல்ல, .....த்தாலதான் சிரிக்கோணும் மக்காள். 


3 comments:

  1. அவ்வாறு பெயரில் பிழை இருப்பின், பெயரை கூறியவருக்கு தண்டனை வழங்க முடியாது. பெயரைப் பதிவற்காக அரசினால் சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிக்கே தண்டனை கொடுக்கப்பட வேண்டும். பெயரை பதிவு செய்வதற்கான ஆவணங்களை பரிசீலித்து உரியவாறு பதிவு செய்வது எந்த நிறுவனம் ஆனாலும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரியின் பொறுப்பு ஆகும். கடமையை சரிவர செய்ய தவறிய வரை விடுத்து, பொதுமக்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மூடத்தனமாகும்.

    ReplyDelete
  2. என்ன கண்டு பிடிப்பா எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்கிறது. இதில் என்ன கண்டு பிடித்து கிழித்து கிடக்கு.

    ReplyDelete
  3. என்ன கண்டு பிடிப்பா எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்கிறது. இதில் என்ன கண்டு பிடித்து கிழித்து கிடக்கு.

    ReplyDelete

Powered by Blogger.