Header Ads



நாட்டை ஒரு மாதத்திற்கு முடக்குமாறு, சுகாதாரப் பிரிவு கோரிக்கை


வேகமாக பரவிவரும் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருகின்ற நிலையில், கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 3,000 நெருங்கியுள்ள நிலையில், நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் நேற்று 100ஐ கடந்துள்ளது.

அத்துடன், கடந்த 13 நாட்களில் மாத்திரம் 1000க்கும் அதிகமானோர் கொவிட்டால் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் நாட்டின் நிலைமை மிக மோசமடையக்கூடும் என அரசாங்கத்துக்கு அறிவித்ததாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையை கட்டுப்படுத்த குறைந்தது, 4 வாரங்களேனும் நாட்டை முடக்க வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.