Header Ads



இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட இரத்தினக்கல், சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது


இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நீல நிற இரத்தினக் கல் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குறித்த கல் இப்போது சுவிட்ஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த கல் பாதுகாப்பாக சுவிட்ஸர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக மாணிக்கம் மற்றும் நகை தொடர்பான தொழில்கள் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

குறித்த இரத்தின கல்லுக்கு ஒரு சான்றிதழ் பெறப்பட வேண்டும் எனவும் அதற்காக சுவிஸ் நாட்டிற்கு இரத்தினக் கல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரத்தினக் கல் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பிறகு தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சான்றிதழைப் பெற்ற பிறகு, குறித்த இரத்தினக் கல் வெளிநாட்டு ஏலத்தில் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, சீனாவில் நடைபெறும் ஏலத்தில் குறித்த கல் விற்கப்படும் என அமைச்சர் லோகன் ரத்வத்தே மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. to whom they are trying to fool. Earlier they said China has given a offer????

    ReplyDelete

Powered by Blogger.