Header Ads



இரட்டை கோபுர தாக்குதலில், பின்லேடனுக்கு தொடர்பு இல்லை - தலிபான் செய்தித் தொடர்பாளர்


- Halley karthi - 

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு, எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் தற்போது கூறியுள்ளது.

அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லையென தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் கூறியுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் எவ்வித முகாந்திரமும் இல்லையென்றும் ஆப்கன் மீதான போருக்கு இந்த சம்பவம் ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்கர்களுக்கு லேடன் இடையூராக கருதப்பட்டபோது அவர் ஆப்கனில்தான் இருந்தார். ஆனால், அவரும், இந்த ஆப்கன் மண்ணும் எவர் ஒருவருக்கும் எதிரியாக செயல்படவில்லை.” என்றும்,பெண்களின் உரிமைகள் குறித்த கேள்விக்கு, “பெண்களை நாங்கள் மதிக்கின்றோம். அவர்கள் எங்களின் சகோதரிகள். அவர்கள் பயப்படக்கூடாது. நாங்கள் தேசத்திற்காக போராடியுள்ளோம். அவர்கள் இதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 31க்குள் அமெரிக்க படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News7

2 comments:

  1. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் தானே மத்திய கிழக்கில் மக்கு மன்னர்கள் ஆளும் காலம் வரை முஸ்லிம் உலகம் மதிப்பின்றி வாழவேண்டும். சத்தியத்தை (நம் புனித மார்க்கத்தை) புறக்கணிக்க துணிந்த நமக்கு எப்படி அநியாயக்காரர்களை எதிர்க்க தைரியம் வரும். (இஃதி நஷ்றாத்தல் முஸ்தகீம் )

    ReplyDelete
  2. பத்து வருடங்களுக்கு முன்பே இந்த உண்மை சவூதி அரேபியா அரசாங்கத்தால் வௌிப்படுத்தப்பட்ட நாடறிந்த உண்மை அது. தாலிபானக்கு அது மிக அண்மையில தான் தெரியவந்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.