Header Ads



ரணிலின் யோசனை தொடர்பில் ஜனாதிபதி அவதானம்


கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி சம்மேளனத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை அண்மையில் நேரில் சந்தித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து கட்சிகளையும், அழைத்து கலந்துரையாட வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட சகல கட்சிகளின் தலைவர்களுடன் குறித்த சம்மேளனத்தை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் பெறப்படும் யோசனை திட்டங்களை செயற்படுத்துவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த முடியும் என தாம் நம்புவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.