Header Ads



நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 6 அம்ச அறிக்கையை வெளியிட்டார் சஜித் (முழு விபரம் இணைப்பு)


இன்றைய(13) தினம் தெபரவெவ திஸ்ஸமஹாராம கெமுனுபுர ஶ்ரீ விசுத்தாராம விகாரையின் ஶ்ரீமத் ரனசிங்க பிரேமதாச ஆரம்ப பிரவினையின் தலைமைப் பெறுப்பாளர் சாலியபுர சுதர்ஷன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பின்னர் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* பொருளாதாரமா அல்லது வாழ்க்கையா?  உடனடியாக நாட்டை மூடக்கு! *

நாட்டின் மோசமான சூழ்நிலையில், "மக்களை வாழ வைக்க தேவையானது பொருளாதாரமா அல்லது ஒக்ஸிஜனா" என்பதில் ஒன்றை அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும் என்றும், நாடு உடனடியாக மூடப்படுவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.இந்த ஆபத்திலிருந்து பாதுகாப்பது என்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்பதோடு, இதன் பின்னர் பொருளாதாரத்தை கருத்தில் கொள்ளலாம் என்றும் கூறினார்.

*ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நிதி! *

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று தொடங்கப்பட்ட 'ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிதியத்திற்கு'பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அவர்களின் சம்பளத்திலிருந்து நிதி உதவி ரீதியாக பங்களித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் "எதிர்க்கட்சியில் இருந்து ஓர் மூச்சு" மற்றும் ஜனசுவாய ஆகிய  இந்த திட்டத்தின் மூலம் 22 சுற்றுகளில் இதுவரை 64 மில்லியன் பெறுமதியான மருத்துவமனை உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

இதனோடினைந்த விதமாக*ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் நிதியம் செயற்படுவதோடு பீடனையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளை பேம்படுத்திக் கொடுப்பதே இதன் பனியாகும்.

*மூன்றாவது தடுப்பூசியை உடனடியாக இறக்குமதி செய்யுங்கள்! *

நாட்டில் நடைமுறையில் உள்ள தடுப்பூசி செயல்பாட்டில் கவனம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர், “தடுப்பூசியின் மூன்றாவது டோஸை” உடனடியாக கொள்வனவு செய்ய வேண்டும் என்று கூறினார். இன்னும் தடுப்பூசி போடாத அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

* எரிவாயு விலையை அதிகரிக்கும் மனிதாபிமானமற்ற முடிவு! *

இந்த நெருக்கடியான நேரத்தில் எரிவாயு விலையை உயர்த்தி, மக்கள் மீது சுமையை சுமத்தும் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு எரிவாயு விலையை உடனடியாக குறைத்து அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். 

* ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டது! *

இதேவேளை, அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிக்கையை விடுத்ததோடு அடுத்த வார பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறும் கோரினார்.

* கட்டுக்கதைகளுக்கு பதிலாக நாட்டுக்கு உண்மையைச் சொல்லுங்கள்! *

இந்த நேரத்தில் நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், பொய்கள் மற்றும் கட்டுக்கதைகளை மக்களுக்கு வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.அரசாங்கம் தமக்கு தேவையான நேரத்தில் 

பாம்பு தரிசன பயன்பாடு, பானிப் பிரச்சாரம் மற்றும் முட்டிகளை ஆற்றில் எறிவது போன்ற மாயைகளில் இருந்து அரசாங்கம் விடுபட்டு நாட்டு மக்களுக்கு உன்மைகளைக் கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

நாட்டுக்கு உண்மையைச் சொல்லும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பி ஓடக் கூடாது என்றும் இந்த பேரழிவை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற யோசனையையும் எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைத்தார்.

No comments

Powered by Blogger.