Header Ads



அம்பாறையில் 3 ஏக்கர் காணியில் 2400 கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யலாம் - Dr அன்வர் ஹம்தானி


கொரோனா தொற்றால் மரணிக்கின்றவர்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு - ஓட்டமாவடி மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மயானத்தில் இன்னும் 300க்கும் மேற்பட்டோர் அடக்கம் செய்யப்படலாம் என  சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள புதிய மயானத்தில் சுமார் 2,400 சடலங்களை அடக்கம் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி மயானத்தில் இதுவரை 1470 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் அதில் 1383 சடலங்கள் இஸ்லாமியர்களுடையவை என்றும் எஞ்சியவை ஏனைய இனத்தவர்களுடையவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.