Header Ads



விமர்சிக்க விரும்பினால் அரசாங்கத்திலிருந்து, வெளியேறுமாறு சுதந்திரக் கட்சிக்கு உத்தரவு


ராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தனது அமைச்சில் வழங்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் போனதால் தனது அமைச்சு குறித்து குறைக்கூறுவதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, அரசாங்கத்தின் அமைச்சரவை குறித்து வெளிட்ட அறிக்கைக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் ரோஹித,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சுகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்கள், விவசாய விளைபொருட்களை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில் பொறுப்புகளை வழங்கினார்.அவர் பத்திக் மற்றும் ஆடைத்தொழிலை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்க முடியும்.ஆனால், அவர் என்ன செய்தார்? என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவர்கள் அறிக்கைகளை வெளியிடாமல் அரசாங்கத்திற்குள் விவாதிக்க வேண்டும்.அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால், அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2020 பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால், அவர்கள் தனியாக போட்டியிட்ட மாவட்டங்களின் முடிவுகள் பரிசீலிக்கப்படும் போது அவர்கள் தேசிய பட்டியல் இடத்தை மட்டுமே பெற்றிருப்பார்கள் என்று அவர் கூறினார்.

அந்த கட்சி தனியாக போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தில் 10,979 மற்றும் நுவரஎலிய மாவட்டத்தில் 6,227 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்று ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டினார்.

முன்னதாக பத்திக்.களிமண் போன்றவற்றுக்கு அவமானமான அமைச்சுக்களை உருவாக்கிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றுக்கு வருவதால் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Tw

No comments

Powered by Blogger.