Header Ads



பசு வதையை முழுமையாக தடைசெய்யும் சட்டம்மூலம் - பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும்


நாட்டில் பசு வதையை முழுமையாக தடை செய்வதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சட்டமூலம் அடுத்துவரும் சில வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பௌத்த சாசன அமைச்சர் என்ற அடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர், சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

இதையடுத்து, ஏழு நாட்களின் பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கமைவான, எண்ணக்கரு பத்திரத்திற்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்தச் சட்டமூலம் முற்றிலும் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான செயலாகவே கருதப்படுகின்றது. ஆனால் உண்மையில் இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மையினரும் அவர்களைச் சார்ந்த நிறுவனங்களும்தான். எந்தவிதமான தூரநோக்கும் இன்றி பாடசாலைக்கல்வியறிவு அற்ற ஒரு கூட்டம் சட்டமியற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதன் விளைவை இந்தநாடு விரைவில் அனுபவிக்கப் போகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.