Header Ads



இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லை - அலி சப்ரி


இலங்கையில் நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்படவில்லை மாறாக அவை வலுப்படுத்தப்பட்டுள்ளன என நீதியமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்திற்காக அலுவலகம் ஆகியவற்றின் பணிகள் தொடர்கின்றன எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அலுவலகங்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் விதத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளன என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிலரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் குறித்த அலுவலகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இழப்பீட்டு அலுவலகத்தின் அதிகாரிகள் அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் வரை பதவியில் நீடிக்கின்றனர் அவர்கள் மிகச்சிறந்த சேவையாற்றுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் முன்னைய தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் இடம்பெறுகி;ன்றன என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.